உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிமிக்கி தரும் அரசு பஸ் மாதர் சங்கத்தினர் குமுறல்

டிமிக்கி தரும் அரசு பஸ் மாதர் சங்கத்தினர் குமுறல்

ஈரோடு:அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாலுகா செயலர் தனலட்சுமி தலைமையில், நசியனுார் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:பெருந்துறை அரசு போக்குவரத்து டெப்போவுக்கு உட்பட்ட, 'பி-12' அரசு பஸ், 'பெருந்துறை - பவானி - பெருந்துறை' என இயக்கப்படுகிறது. இந்த பஸ் சரியான நேரத்துக்கு வந்து செல்வதில்லை. சில நேரம் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாகணவியர் வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். சரியான நேரத்தில் வந்தாலும், பெண்கள், பள்ளி குழந்தைகள் நிறுத்தினால் நிறுத்தாமல் செல்கின்றனர். குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தும்படி டிக்கெட் கேட்டால் ஏற்றாமல் இழிவாக பேசுகின்றனர். இதுபற்றி கடந்த, 12ல் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் விசாரித்து, வெற்றி பயண திட்ட பயனை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ