உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவன் மாயமான விவகாரம் ஹெச்.எம்.,மிடம் விளக்கம் கேட்பு

மாணவன் மாயமான விவகாரம் ஹெச்.எம்.,மிடம் விளக்கம் கேட்பு

ஈரோடு:அரசுப்பள்ளி மாணவன் மாயமான விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியைக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஈரோட்டில் கரூர் பிரதான சாலையில் உள்ள கொள்ளுக்காடுமேடு அரசு சிறுவர்கள் இல்லத்தில், கரூர் மாவட்டம் குளித்தலை க.பேட்டையை சேர்ந்த விருதகிரி, 13, தங்கியிருந்தார். லக்காபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.கடந்த, 10ம் தேதி காலையில் மூன்றாவது பாட வேளையில் வகுப்பறையில் மாணவன் இல்லை. இதுபற்றி ஆசிரியர் சாந்தி, சக மாணவர்களிடம் கேட்டபோது, கழிவறைக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர். சக மாணவர்களை அனுப்பி பார்த்தபோது விருதகிரி இல்லை. இதனால் தலைமை ஆசிரியை கலைச்செல்வி, மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிந்த போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர். பள்ளி கல்வித்துறைக்கும் பள்ளியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 'இதுகுறித்து தலைமை ஆசிரியை கலைச்செல்விக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அது கிடைக்க பெற்றவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை