உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் மாணவர் துாண்டல் திறன் நிகழ்வு

பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் மாணவர் துாண்டல் திறன் நிகழ்வு

ஈரோடு, கோபி பி.கே.ஆர்., மகளிர் கலை கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான மாணவர் துாண்டல் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடந்தது.சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லுாரி வணிகவியல் இயங்குனர் குமரேசன், வெற்றிக்கான வழிகள் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதை தொடர்ந்து ஏழு நாட்கள் நடக்கும் இந்நிகழ்வில் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வு நடக்கவுள்ளது.இந்நிகழ்வில் கல்லுாரி செயலர் வெங்கடாசலம், துணை முதல்வர் தனலட்சுமி, துறை முதன்மையர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். வணிகவியல் துறை பேராசிரியர் சித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை