உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலைத்திருவிழா போட்டியில் மாணவர் அசத்தல்

கலைத்திருவிழா போட்டியில் மாணவர் அசத்தல்

ஈரோடு:ஈரோடு மாநகரில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு, அரசு நிதியுதவி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டி, குறுவளமைய அளவில் நடக்கிறது. இதில் ஏற்கனவே பள்ளி அளவில் வெற்றி பெற்றவர்கள் தகுதி பெற்றனர். குழு, தனி நபர்களுக்கு ஒன்பது போட்டி நேற்று நடத்தப்பட்டது. ஈரோடு வளையக்கார வீதி மாநகராட்சி துவக்க பள்ளி, ஈரோடு வீரப்பன்சத்திரம் துவக்க பள்ளி, கலைமகள் கல்வி நிலைய துவக்க பள்ளியில் போட்டிகள் நடந்தன. இதுபோல் அனைத்து வட்டாரங்களிலும் போட்டி நடத்தப்பட்டது. ஈரோடு வளையக்கார வீதி மாநகராட்சி துவக்க பள்ளியில் நடந்த போட்டியில் ஒன்பது துவக்க பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதலிடம் பிடிப்போர் வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.களிமண்ணில் பொம்மை செய்தல், ஓவியம் வரைதல், பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்டவற்றுக்கு மாணவ, மாணவியர் நடனமாடி திறனை வெளிபடுத்தினர்.ஈரோடு வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தி, வேலுசாமி, மேற்பார்வையாளர் மயில்சாமி மேற்பார்வையில் போட்டி நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியைகள் நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். இன்றுடன் குறுவள மைய அளவிலான போட்டி நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை