உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காதல் தோல்வியால் மாணவி விபரீத முடிவு

காதல் தோல்வியால் மாணவி விபரீத முடிவு

ஈரோடு; நீலகிரி மாவட்டம் கூடலூர், ஈல்நாட்டு காலனி, அண்ணா நகரை சேர்ந்த சுரேந்தர்குமார் மகள் ரேஷ்மா, 19; ஈரோட்டில் ஒரு தனியார் கல்லுா-ரியில் பி.எஸ்.சி., பேஷன் டெக்னாலஜி மூன்றா-மாண்டு படித்தார். ஈரோடு கே.கே.நகரில் ஒரு அடுக்குமாடி குடியி-ருப்பில், மூன்று பெண்களுடன் ஒரு அறையில் வசித்தார். ஒரு பெண் ஊருக்கு சென்ற நிலையில், மற்ற இருவரும் வேலைக்கு சென்று-விட்டு, 23ம் தேதி இரவு வீடு திரும்பினர். தங்களிடம் இருந்த சாவி மூலம் வீட்டுக்கதவை திறந்து சென்றனர். உள்ளே சென்றபோது படுக்கை அறை மின் விசிறியில் ரேஷ்மா துாக்-கிட்ட நிலையில் இருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோ-தனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு தாலுகா போலீசாரின் முதற்கட்ட விசார-ணையில், காதல் தோல்வியால் ரேஷ்மா துாக்-கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை