மாணவி விபரீத முடிவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள வரதம்பாளையத்தை சேர்ந்தவர் தேவதர்ஷினி, 16; சத்தி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி. பெற்றோர், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், பாட்டி பூவாத்தாள் பராமரிப்பில் இருந்தார்.நேற்று முன்தினம் பாட்டி வேலைக்கு சென்ற நிலையில், தேவதர்ஷினி வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.