மேலும் செய்திகள்
எஸ்.டி., சான்றிதழ் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்
13-May-2025
சத்தியமங்கலம் :கடம்பூர் மலையில் குன்றி மலை கிராமத்துக்கு செல்லும் சாலை, கரடு, முரடாக உள்ளது. சாலையை சீரமைக்க மலை கிராம மக்கள், பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். குறிப்பாக மாமரத்துபள்ளம் முதல் குன்றி வரையிலான, 10 கி.மீ., சாலை முற்றிலும் சேதமாகி விட்டது. இதனால் மழை காலங்களில், வாகனங்களே செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், சாலை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக குன்றி-மாக்கம்பாளையம் செல்லும் சாலையை, அதிகாரிகள் குழுவினர், நேற்று அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியதாவது: அதிகாரிகள் அளவீடு செய்தது ஆறுதல் அளித்தாலும், சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். சாலை தற்போது, 3.20 மீ., அகலம் மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில், 3.45 மீ., அகலத்தில் இருந்தது. பழையபடியே சாலை அமைக்க வேண்டும். தார்ச்சாலை அமைத்தால் மூன்று மாதங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை. எனவே கான்கிரீட் சாலையாக அமைத்தால் மண் அரிப்பு ஏற்படாமல் உறுதியாக இருக்கும். இவ்வாறு கூறினர்.
13-May-2025