வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து ஆய்வு
வாக்காளர் சிறப்பு சுருக்கதிருத்தம் குறித்து ஆய்வுஈரோடு, நவ. 12-ஈரோடு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு உப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். இதில், 18 வயது நிரம்பியவர்கள் விடுபடக்கூடாது. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும். வாக்காளர் சிறப்பு முகாம்களில் பெறப்படும் படிவங்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் பார்வையாளர் விளக்கினார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மணீஷ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், ஆர்.டி.ஓ., ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.