மேலும் செய்திகள்
'மக்காச்சோளம் பயிரிட்டால் மானியம் வழங்கப்படும்'
11-Aug-2026
செயல்விளக்க திடலில் வேளாண்துறை ஆய்வு
22-Jul-2026
ஈரோடு:ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஈரோடு மாவட்டத்தில், 38,000 ஏக்கரில் மக்காசோளம், கோடை, காரீப், ராபி பருவங்களில் சாகுபடியாகிறது. மானாவாரி பயிராக அந்தியூர் வட்டாரத்தில் பர்கூர் மலைப்பகுதி, தாளவாடி, சத்தி வட்டாரங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இறவை பயிராக அனைத்து வட்டாரங்களிலும் சாகுபடியாகிறது.மக்காசோள சாகுபடியை ஊக்குவிக்க, மக்காசோள செயல் விளக்க திடல் தொகுப்பு, 660 ெஹக்டேரில் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஒவ்வொரு செயல் விளக்க திடல் அமைக்க ெஹக்டேருக்கு, 11,500 ரூபாய் மானியத்தில் வீரிய ஒட்டு ரக மக்காசோள விதைகள், 15 கிலோ தழைச்சத்து, மணிச்சத்தை அதிகரிக்க உதவும், திரவ உயிர் உரங்களும், மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. வீரிய ஒட்டுரக மக்காசோள விதைகள் கிலோ, 100 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள், அந்தந்த பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
11-Aug-2026
22-Jul-2026