துவரை, கம்பு, பருத்தி பயிர்கள் சாகுபடி செய்ய மானியம் வழங்கல்
சென்னிமலை, சென்னிமலை வட்டாரத்தில், 22 கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு, துவரை, கம்பு, பருத்தி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.மேலும், கோடை உழவு பணி மேற்கொண்டு நிலக்கடலை, பயறு வகைகள், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு உழவு பணிக்கு பின்னேற்பு மானியமும் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், நில ஆவணங்கள், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விபரங்களுடன் சென்னிமலை வட்டார வேளாண்மை துறை அலுவலகம் அல்லது தங்கள் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களிடம் வழங்கி பதிவு செய்து பயன் பெறலாம். மேலும், பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு தேவைப்படும் விவசாயிகளும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.இத்தகவலை, சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி அலுவலர் பாலாஜி தெரிவித்துள்ளார்.