மேலும் செய்திகள்
மாடித்தோட்ட தொகுப்பு விண்ணப்பிக்க அழைப்பு
16-Nov-2026
சென்னிமலை: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில், சென்னிமலை வட்டாரத்தில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே காய்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்து பயன்பெறும், வீட்டுத்தோட்டம் திட்டத்தில், மானிய விலையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள், காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்பு, மானியத்தில் வழங்கப்படுகிறது. மாடித்தோட்ட தொகுப்பின் மதிப்பு, 1,450 ரூபாய். இதில் அரசு மானியம், 725 ரூபாய். காய்கறி விதை தொகுப்பின் மதிப்பு, 60 ரூபாய். இதில் மானியம், 45 ரூபாய். பழச்செடி தொகுப்பின் மதிப்பு, 100 ரூபாய். இதில் அரசு மானியம், 75 ரூபாய்.வீடுகளில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாடிகளில் தோட்டம் அமைத்து, காய்கறி, பழங்கள் மற்றும் மூலிகை செடிகளை வளர்க்கலாம். சென்னிமலை வட்டாரத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மக்கள் tnhorticulture.tn.gov.in/kit/public என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இத்தகவலை சென்னிமலை வட்டார தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
16-Nov-2026