சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் திடீர் அகற்றம்
தாராபுரம், தாராபுரம் உழவர் சந்தை அருகே சாலையோரத்தில், வியாபாரிகள் காய்கறி கடைகள் அமைத்து, விற்பனை செய்கின்றனர். இதனால் உழவர் சந்தை விவசாயிகளின் விற்பனை குறைவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் வசந்தா ரோட்டில் இருந்து, உழவர் சந்தை செல்லும் வழியில் இருந்த சாலையோர கடைகளை, நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது கட்டட உரிமையாளர் தரப்பில், மற்ற பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், இங்கு மட்டும் அகற்றுவது ஏன்? என கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சில கடைகள் அகற்றப்பட்டன.