மேலும் செய்திகள்
பி.எப்., மண்டல ஆணையர் பொறுப்பேற்பு
16-Oct-2025
ஈரோடு, ஈரோடு மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில், பெருந்துறை சிப்காட்டில், 'பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா' (தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை அதிகரிக்க உருவாக்கப்பட்ட திட்டம்) எனப்படும் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சுதர்சன் ராவ், மாவட்ட அமலாக்க அதிகாரி சரவணகுமார் ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்கினர். பி.எப்., உறுப்பினர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு இத்திட்டத்தின் நோக்கம், பயன் குறித்து விளக்கினர். சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். அனைத்து பி.எப்., சார்ந்த நிறுவனங்களும், தங்களது நிறுவன எம்பிளாயர் போர்ட்டல் வழியாக, பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த நிறுவனங்கள், அதன் விபரங்களை, do.epfindia.gov.inஎன்ற மின்னஞ்சலுக்கு பதில் அளிக்க வேண்டும் என, கேட்டு கொண்டனர்.
16-Oct-2025