மேலும் செய்திகள்
புதிய அரசுக்கு விவசாயிகள் 'குரல்' கேட்குமா?
30-May-2026
ஈரோடு:மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். தற்போது அதிக விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் வேதனையாக இருந்து வருகிறது.ஈரோடு மாவட்ட உழவர் விவாதக்குழு செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது: பவானி, அந்தியூர், கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. ஏக்கருக்கு, 30 மூட்டை அளவில் விளைச்சல் கிடைக்கிறது. சோளமாக மக்களுக்கு பயன்தருவது மட்டுமின்றி மாட்டு தீவனம், கோழி தீவனங்களுக்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.இரு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட விதை, மருந்து, உரங்கள், கூலி கடுமையாக விலை உயர்ந்து விட்டது. தற்போது முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் கோழிக்கு உணவாக பயன்படும் மக்காச்சோளத்தின் விலை அதிகரிக்கவில்லை. ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சமாக, 2,500 ரூபாய் என்ற ரீதியில் மார்க்கெட் கமிட்டிகளில் விலை போகிறது. வெளிவியாபாரிகளும், அதே அளவில் தான் எடுக்கின்றனர். விவசாயிகளுக்கு செலவினம் போக லாபம் போதுமானதாக கிடைப்பதில்லை. நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்து எடுப்பது போல், மக்காச்சோளத்திற்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயித்து, நேரடி கொள்முதல் நிலையம் மூலம், அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.
30-May-2026