உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பொறியியல் கல்லுாரியில் சிஸ்டம்ஸ் சென்டர் எக்ஸலன்ஸ்

கொங்கு பொறியியல் கல்லுாரியில் சிஸ்டம்ஸ் சென்டர் எக்ஸலன்ஸ்

ஈரோடு, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், ஊர்தி பொறியியல் துறையில், டெல் பி.டி.வி.எஸ்., நிறுவனத்தின் அட்வான்ஸ்டு பியூல் இன்ஜெக்சன் சிஸ்டம்ஸ்க்கான சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் திறந்து வைக்கப்பட்டது. இந்த நவீன தொழில் நுட்ப மையம், மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும், மேம்பட்ட சோதனை முறைகள் மற்றும் நேரடி தொழில் துறை நடைமுறை குறித்த நடைமுறை அறிவை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முதன்மை தொழில் நுட்ப அதிகாரி விஷ்வநாத், தொழிலியல் மற்றும் மேம்பாட்டு துறைத்தலைவர் ஆனந்த், கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன், கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன், கொங்கு கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் சச்சிதானந்தன் முன்னிலையில் திறந்து வைத்தனர். ஊர்தி பொறியியல் துறை பேராசிரியர் ஜெகதீசன், துணை பேராசிரியர் நித்யானந்தன் நிகழ்வை, ஒருங்கிணைத்து நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி