உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு;10,309 பேர் எழுத ஏற்பாடு

தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு;10,309 பேர் எழுத ஏற்பாடு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில், 32 தேர்வு மையங்களில் அக்.,11ல், 10,309 மாணவ, மாணவியர் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு எழுதுகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு எழுத விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர், 10,309 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு வரும், 11ல் தேர்வு நடக்கிறது. இதற்காக மாவட்டத்தில், 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு பிளஸ் 2 முதல் இளங்கலை பட்டபடிப்பு முடிக்கும் வரை அதாவது, 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !