உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை

தாராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட மக்கள், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். அலுவலகத்தில் இருந்த தாசில்தார் ராமலிங்கத்திடம் கூறியதாவது:சொந்த வீடு இல்லாததால், வீட்டு மனை பட்டா கேட்டு, கலெக்டர் மற்றும் அமைச்சரிடம் மனு தந்தும் இதுவரை வழங்கப்படவில்லை. பல போராட்டம் நடத்தியும் பயனில்லை என்று வாக்குவாதம் செய்தனர். வந்திருந்தவர்களில் ஒரு சிலர், தங்களது, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் சமாதானம் செய்தும் திருப்தி அடையாத மக்கள், டிச., 4க்குள் வீட்டு மனை பட்டா வழங்கப்படாவிட்டால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ