உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கட்டாயமாக, மதுபான பாட்டிலை திரும்ப பெற்று, பணம் தர வேண்டும் என கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். இதை கண்டித்து நேற்று காலை, 10:00 மணிக்கு சூரியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் குவிந்தனர். பாட்டில்களில் ஒட்டி விற்பனை செய்வதற்கான ஸ்கேன் ஸ்டிக்கர்களை திரும்ப ஒப்படைத்தனர். அலுவலர்கள் அவற்றை பெறவில்லை. இதை தொடர்ந்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதியம், 12:00 மணிக்கு மாவட்ட அளவில் உள்ள, 182 கடைகளில் ஒரு சில கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்கப்படவில்லை. ஈரோடு மாவட்ட மேலாளர் குணசேகரன், கோவை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 'நீதிமன்ற உத்தரவின்படி, பாட்டிலை திரும்ப பெற வேண்டும். பெற மறுத்தது ஆய்வில் கண்டறியப்பட்டால் ஊழியர் மீது நடவடிக்கை, சஸ்பெண்ட் உத்தரவு, இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்றனர்.மதியம், 2:00 மணிக்கு மேல் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனையை துவக்கினர். ஆனாலும், பல கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி