உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும்போது தீப்பிடித்த கார் மகளுடன் தப்பிய ஆசிரியர்

ஓடும்போது தீப்பிடித்த கார் மகளுடன் தப்பிய ஆசிரியர்

தாராபுரம் :குண்டடத்தை சேர்ந்தவர் அன்புமணி, 45; அரசுப்பள்ளி ஆசிரியர். தேனியில் உள்ள மூத்த மகள் வளைகாப்புக்காக, இளைய மகள் நித்யா, சக ஆசிரியர்கள் மகேஷ், சாந்தி ஆகியோருடன், வாடகை ஹூண்டாய் காரில் நேற்று மதியம் சென்றனர். தாராபுரத்துக்கு முன்பாக உள்ள தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக ரேடியேட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் காரின் முன் பகுதியில் புகை வந்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் சொர்ணகுமார், 42, உடனடியாக நிறுத்தி, அனைவரையும் இறங்க செய்தார். சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சாலையில் கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்படி சென்ற தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ