விபத்தில் ஆசிரியர் பலி
ப.வேலுார், சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே, கள்ளிக்காட்டை சேர்ந்தவர் சேகர் மகன் அசோக்குமார், 34; இவர், சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், 'ஆன்லைன்' மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வந்தார். இந்நிலையில், தன் டூவீலரில், பழனி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, கீரம்பூர் ராசாம்பாளையம், டோல்கேட் அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லை நோக்கி சென்ற அரசு பஸ், இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வழக்குப்பதிவு செய்த பரமத்தி போலீசார், விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.