உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியை, சிறுமி, பெண் மாயம்

ஆசிரியை, சிறுமி, பெண் மாயம்

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அருகே செம்படார்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி பவித்ரா, 32; பெரிய கொடிவேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த, 4ம் தேதி ஆசிரியை பணியில் சேர்ந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ரமேஷ் புகாரின்படி சத்தியமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.* சித்தோடு அருகே தயிர்பாளையத்தில் வசிப்பவர் கல்பனா, 35; நேபாள நாட்டை சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன் தயிர்பாளையத்துக்கு வந்தார். அதே பகுதியை சேர்ந்தவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். இவரின், 16 வயது மகள், எட்டாம் வகுப்பு மாணவி. கடந்த, 8ம் தேதி இரவு தாயுடன் துாங்கியவர், விடிந்து பார்க்கும்போது மாயமாகி விட்டார். கல்பனா புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.* ஈரோடு, வீரப்பன்சத்திரம், ஜான்சி நகரை சேர்ந்த மூர்த்தி மனைவி மகேஸ்வரி, 52; வெளியூரில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கேயே ஒரு வாரம் முதல், 10 நாட்கள் வரை தங்கி வீடு திரும்புவது வழக்கம். கடந்த ஜூன், 6ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதாக, மகன் சதீஷ் குமாரிடம் தெரிவித்து சென்றார். இந்நிலையில் அவரது மொபைல்போனை மகன் தொடர்பு கொணட்போது, சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. மதுரையில் உள்ள கோவில்களுக்கு சென்று தேடியும் தகவல் இல்லை. மகன் புகாரின்படி தாயை, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர். * சென்னிமலை யூனியன் எல்லைகுமாரபாளையம் கிராமம் பள்ளக்காட்டுபுதுாரை சேர்ந்தவர் சேகர், 26; இவரது சகோதரி மணிமேகலை, 27; இவரின் கணவர் அவிநாசி, புதுப்பாளையத்தை சேர்ந்த காளியப்பன். தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் கணவனுடன் ஏற்பட்ட தகராறால் கோவித்துக்கொண்டு தம்பி வீட்டுக்கு வந்து விட்டார்.சென்னிமலையில் ஒவு ஜூஸ் கடையில் வேலை செய்தார். இரண்டு நாட்களுக்கு முன் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. சேகர் புகாரின்படி சென்னிமலை போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ