உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலை கிராம பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

மலை கிராம பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மலை கிராம பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் அரசு, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்க அரசு அனுமதித்தது. இதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித்தனியே விகிதாசாரப்படி ஊதியம் வழங்க வழிகாட்டப்பட்டது. இதனால் மாநகர், புற நகர் பகுதிகளில் பெரும்பாலான பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்பபட்டன. ஆனால், மலை கிராமங்களில் காலி பணியிடங்களை நிரப்புவது, பள்ளி கல்வித்துறைக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: பட்டப்படிப்புடன் டெட் பாஸ் செய்திருக்க வேண்டும் என்ற விதியால், மலை கிராமங்களில் போதிய ஆசிரியர்களை நியமிக்க இயலவில்லை. மேலும் மலை கிராம பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பணியாற்ற யாரும் முன் வருவதில்லை. இதனால் கடம்பூர், திம்பம், தாளவாடி, ஆசனுார், பர்கூர் மலை கிராம பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை