உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பீ.டி., - பி.ஆர்.டி.இ., கலந்தாய்வை நடத்த கோரி ஆசிரியர்கள் மனு

பீ.டி., - பி.ஆர்.டி.இ., கலந்தாய்வை நடத்த கோரி ஆசிரியர்கள் மனு

ஈரோடு, டிச. 24-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் (பி.டீ.,) மற்றும் வட்டார வளமைய பயிற்றுனர்களுக்கான (பி.ஆர்.டி.இ.,) கலந்தாய்வை நடத்தக்கோரி மனு வழங்கினர். இதுபற்றி ஆசிரியர்கள் தரப்பில் வழங்கிய மனுவில் கூறியதாவது:கடந்த, 2023-24ல், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 3,192 பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்களை நிரப்ப, அரசாணை வெளியானது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த, 2023 அக்.,ல் அறிவிப்பு வெளியிட்டு, பிப்., 2024ல் தேர்வு நடத்தி, மே மாதம் தேர்வு முடிவு வெளியானது. வெற்றி பெற்றவர்களுக்கு ஜூன் மாதம் சான்றிதழ் சரி பார்த்து, ஆக., மாதம் வெளியிட்ட உத்தேச தேர்வர்கள் பட்டியலில் இடம் பெற்றோம். 4 மாதங்கள் கடந்தும் கலந்தாய்வு நடத்தவில்லை. எங்களுடன் தேர்வாகிய ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர்.பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான தேர்வு, 10 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்பட்டு, தனியார் பள்ளிகளில் வேலை செய்தவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது பணி இல்லாமல் உள்ளனர்.இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர். எங்களுக்கு பணிக்காலம் மிகவும் குறைவு. தற்போது தனியார் பள்ளிகளிலும் மீண்டும் சென்று பணியில் சேர முடியவில்லை. எனவே, எங்களுக்கான கலந்தாய்வு நடத்தி, பணியாணை வழங்கி, பணி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !