உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செல்பி எடுப்பதாக நடித்து 12 பவுன் திருடிய வாலிபர் கைது

செல்பி எடுப்பதாக நடித்து 12 பவுன் திருடிய வாலிபர் கைது

ஈரோடு, ஈரோட்டில், செல்பி எடுப்பதாக நடித்து, காய்கறி கடை உரிமையாளரிடம் இருந்து, 12 பவுன் தங்க நகையை பெற்று தப்பியோடியவர், சென்னையில் கைது செய்யப்பட்டு, கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு, சென்னிமலை சாலை மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. அ.தி.மு.க. 51வது வட்ட செயலாளர். இவர் மகன் அரி அய்யப்பன், 26. அப்பகுதியில் காய்கறி கடை வைத்துள்ளார். காய்கறி கடையில், அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் கவுதம், 31, என்பவர் இரு மாதங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த, 23ம் தேதி மொபைல் போனில் செல்பி எடுக்க அரி அய்யப்பனிடம் நகையை கவுதம் கேட்டுள்ளார். இதை நம்பி, 12 பவுனால் ஆன முறுக்கு செயினை கழற்றி கொடுத்துள்ளார்.அதனை அணிந்தபடி, இருக்கையில் அமர்ந்து செல்பி எடுப்பது போன்று நடித்த கவுதம் அங்கிருந்து தப்பியோடினார். இதுபற்றி அரி அய்யப்பன், ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், கவுதம் மொபைல் போன் சிக்னல் சென்னையில் இருப்பதாக காட்டியது. போலீசார் உடனடியாக சென்னை சென்று கவுதமை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் கவுதம் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி