உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரட்டடிபாளையத்தில் கோவில் இடித்து அகற்றம்

கரட்டடிபாளையத்தில் கோவில் இடித்து அகற்றம்

கோபி, டிச. 4-கோபி-சத்தி சாலையில், கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்த, மாரியம்மன், விநாயகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கற்சிலைகளை, அறநிலையத்துறையினர், கடந்த மாதம் அகற்றினர்.இந்நிலையில் ெநடுஞ்சாலை, வருவாய் மற்றும் அறநிலையதுறை, கோபி போலீசார் கோவிலை நேற்று காலை, 6:00 மணிக்கு இடிக்கும் பணியை தொடங்கினர். 10:00 மணிக்கு பணி முடிந்தது. 'சாலை விரிவாக்கப்பணிக்காக வேண்டி, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த கோவிலை இடித்து அகற்றினோம்' என்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை