பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்
ஈரோடு: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கி-யது. ஈரோடு மாவட்டத்தில், 117 மையங்களில், 353 பள்ளிகளில் படிக்கும், 24,854 மாணவ, மாணவியர், 1,066 தனித்தேர்வர் என, 25,920 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட கண்காணிப்பாளராக அரசு தேர்வுகள் இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) ராமசாமி நிய-மிக்கப்பட்டிருந்தார். அவர் ஆய்வில் ஈடுபட்டார்.