உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடி கோவிலில் தெப்பத்திருவிழா

தாளவாடி கோவிலில் தெப்பத்திருவிழா

சத்தியமங்கலம்.:ஈரோடு மாவட்டம் தாளவாடிமலையில் உள்ள திகினாரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. மதியம், 12:00 மணியளவில் வீதியுலா நடந்தது. இதில் ரங்கசாமி, மல்லிகார்ஜுனா சுவாமிகளின் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குளத்தை அடைந்தது. அங்கு பூஜையை தொடர்ந்து, கொட்டும் மழையில் தெப்பத்திருவிழா நடந்தது. குளத்து தண்ணீரில் தேர் வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கப்பட்டு குளத்தை மூன்று முறை சுற்றி வந்தனர். குளக்கரையில் பக்தர்கள் கொட்டும் மழையில் நின்றபடி கண்டு களித்தனர். இதில் தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனுார் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை