மேலும் செய்திகள்
மார்க்கெட் கட்டமைப்பு மறு ஆய்வுக்கு அறிவுரை
23-Sep-2026
ஈரோடு:ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். மனு விபரம்: ஈ.கே.எம்.அப்துல் கனி வணிக வளாகத்தில், 240க்கும் மேற்பட்ட கடை செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக பல லட்ச ரூபாய் கடன் வாங்கி ஜவுளி ரகங்களை குவித்து, வியாபாரத்துக்கு தயாராகி வருகிறோம். ஆனால் பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை தற்காலிக கடை அமைக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் வெளி மாநில வியாபாரிகள் கடை அமைத்து, டேமேஜ் துணிகளை வியாபாரம் செய்வதால், வணிக வளாகத்தில் தரமான துணிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. ஆண்டு முழுவதும் வளாகத்தில் கடை நடத்தி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வரும் நிலையில், பண்டிகை நேரத்தில் இதுபோன்ற தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்குவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதுபோன்ற தற்காலி கடைகளுக்கு அனுமதி தரக்கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
23-Sep-2026