சிவன்மலை கோவிலில் தைப்பூச திருவிழா முகூர்த்தக்கால் பூஜை
சிவன்மலை கோவிலில்தைப்பூச திருவிழாமுகூர்த்தக்கால் பூஜைகாங்கேயம், டிச. 13-காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர்த்திருவிழா மூன்று நாட்கள் நடக்கும். இதை முன்னிட்டு முதல் நிகழ்வாக தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மலையில் இருந்து படிக்கட்டு வழியாக முகூர்த்தக்கால், அடிவாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தேரில் நான்கு பக்கங்களிலும் முகூர்த்தக்கால் நட்டு பூஜை செய்யப்பட்டது. நிகழ்வில் கோவில் சிவாச்சரியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.