உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை முருகன் கோவிலில் பிப்.,3ல் தைப்பூச கொடியேற்றம்

சென்னிமலை முருகன் கோவிலில் பிப்.,3ல் தைப்பூச கொடியேற்றம்

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர் திருவிழா, பிப்., ௩ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்-றான, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, 14 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா பிப்., ௩ம் தேதி மதியம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இதை தொடர்ந்து, 7ம் தேதி இரவு, பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி மயில் வாகன காட்சி; 10ம் தேதி இரவு, கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு வசந்த திருக்கல்யாணம் நடக்கிறது.முக்கிய நிகழ்வான தேரோட்டம், 11ம் தேதி காலை, 6:30 மணிக்கு நடக்கிறது. 13ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி; 14ம் தேதி இரவு தெப்போற்சவம் மற்றும் பூத வாகன காட்சி நடக்கிறது.திருவிழா முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம், 15ம் தேதி இரவு நடக்கிறது. 16ம் தேதி இரவு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திரு-விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ