உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நுாற்றாண்டை கடந்த பூப்பறிக்கும் திருவிழா; சென்னிமலையில் நேற்று உற்சாகம் இல்லை

நுாற்றாண்டை கடந்த பூப்பறிக்கும் திருவிழா; சென்னிமலையில் நேற்று உற்சாகம் இல்லை

சென்னிமலை: சென்னிமலை பகுதியில் நடக்கும், பூப்பறிக்கும் திருவிழா நேற்று உற்சாகம் குறைந்து காணப்பட்டது.தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. சென்னிமலை பகுதியில், தை பொங்கல் விழா பெண்கள் திருவிழாவாக தான் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு, தை இரண்டாம் நாள் நடக்கும் பூப்பறிக்கும் விழா நுாற்றாண்டுகளை கடந்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், இளம் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மலைகளில் இருந்து ஆவாரம் பூ பறிக்கின்றனர்.சென்னிமலையின், தென்புறம் உள்ள மணிமலை பகுதிக்கு சென்று பூப்பறித்து வருவர். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் விழாவில் நேற்று, 50க்கும் குறைவான பெண்களே கலந்து கொண்டனர். இதனால் பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது. ஆனால், கிராம பகுதிகளான தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லைகுமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் முதலமடை பகுதியிலும்.ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம், இளம் பெண்கள் அம்மன்கோவில் பகுதியிலும் தாங்கள் கொண்டு சென்ற கரும்பு, தின்பண்டங்களை உண்டு மகிழ்ந்து அப்பகுதியில் பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூக்களை பறித்து, பொங்கலின் பெருமையை கூறும் வகையில் பாட்டு பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர். பின்பு மாலை வீடு திரும்பி, வாசலில் கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை