உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடிந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்

இடிந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்

மொடக்குறிச்சி, மொடக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இங்கு எட்டு ஆசிரியர், 280 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி பின்புறத்தில் இருந்த, 15 அடி நீள சுற்றுச்சுவர் நேற்றுமுன் தினம் மாலை இடிந்து விழுந்தது. இந்த சுற்றுச்சுவர் ஹலோ-பிளாக் கற்களால் கட்டப்பட்டது. மழை நீர் வடிகால் கட்டும் பணியின் போது சுவற்றின் மீது மண்ணை கொட்டி குவித்தனர். சில தினங்களுக்கு முன் மண் முழுமையாக மண்ணை அள்ளிய நிலையில் இடிந்துள்ளது. தொடர் மழை ஈரத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் இடிந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆய்வு நடத்தினர். விரைவில் சுற்றுச்சுவர் கட்டி கொடுக்க, வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்ததாக, பள்ளி தலைமை ஆசிரியர் இமானுவேல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை