பிறப்பு சான்று பதிவுக்கு டிச., 31 வரை அவகாசம்
பிறப்பு சான்று பதிவுக்குடிச., 31 வரை அவகாசம்ஈரோடு, அக். 9--பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழ் ஆகும். பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுனர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம் பெற முக்கிய ஆவணமாகும்.கடந்த, 2,000 ஜன., 1க்கு முன் பிறந்தவர்கள், 2,000ம் ஆண்டை கணக்கில் கொண்டு, 2014 டிச., 31 வரை பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய காலவரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இது, 2019 டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டு, 2024 டிச., 31 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பிறப்பு பதிவு செய்யப்பட்ட மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், சம்மந்தப்பட்ட தாசில்தார், டவுன் பஞ்., அலுவலர் ஆகியோரிடம் பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.