மாவட்டத்தில் சரிந்து வரும் நெல் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டு 15 ஆயிரம் ஏக்கர் குறைந்தது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், 15 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக, வேளாண் துறை அதிகா-ரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசன வாய்க்கால்களில் பாசனம் நடக்கிறது.நெல், மஞ்சள், கரும்பு, வாழை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்-டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்-ணீரைக் கொண்டு அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படு-கிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நெல் சாகுபடி பரப்பு கடந்த மூன்றாண்டுகளாக குறைந்து வருகிறது. விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது, போதிய விலை கிடைக்காததால், விவசாயத்தை விட்டு விவசா-யிகள் வெளியேறுதல் போன்ற காரணங்களால், நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவது வேளாண்துறை புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கீழ்ப-வானி, கொடிவேரி, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதி-களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நன்செய், புன்செய் உள்ளிட்ட மூன்று சீசன்களிலும் ஒவ்வொரு சீசனுக்கும் தேவைக்கேற்ப சராசரியாக 30 முதல் 35 நெல் கொள்-முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவை தவிர, தனியார் நெல் கொள்முதல் செய்பவர்களிடமும், விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இருப்பினும் பெரும்பகுதி அரசு கொள்-முதல் மையங்கள் மூலமாக அரசு நிர்ணயித்த விலைக்கு வாங்கப்-படுகிறது.மாவட்டத்தில் கடந்த, 2021------------22ல், 76,223 ஏக்கரிலும், 2022--23, 75,608 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில், 10,000 ஏக்கரில் நெல் சாகுபடி குறைந்திருக்கிறது. நடப்பாண்-டான, 2023--24ல் மேலும், 15 ஆயிரம் ஏக்கர் குறைந்து, 60,198 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடியாகி உள்ளது. அதே நேரத்தில், 2021--22ல் அரசு நெல் கொள்முதல் மையங்-களில், 96,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆனது. 2022--23ல், 71,000 மெட்ரிக் டன் கொள்முதலாகியுள்ளது. குறிப்-பாக, 2023--24ல், ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 15,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. இவ்வாறு அதி-காரிகள் கூறினர். நடப்பாண்டு, 2024--25ல், மேலும் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: திருச்சி, தஞ்சை, திரு-வாரூர், நாகை, புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்க-ளுக்கு அடுத்தபடியாக, அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்-வது ஈரோடு மாவட்டத்தில் தான். கடந்த இரண்டு ஆண்டாக, மேட்டூர் வலது கரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால், மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.அதுமட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள், மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். விவசாய குடும்பத்தி-லேயே அடுத்த தலைமுறை விவசாயிகள் குறைந்து போவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.இவ்வாறு கூறினர்.