உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளி ஜோடி திருமணத்துக்கு மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை உதவி

மாற்றுத்திறனாளி ஜோடி திருமணத்துக்கு மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை உதவி

திருப்பூர்:, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி, 32. மாற்றுத்திறனாளியான இவர், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பழக்கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி, 27; மாற்றுத்திறனாளி. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் சம்மதித்த நிலையில், போதிய வசதியின்றி தவித்தனர். தகவலறிந்த திருப்பூர் 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளையினர், திருமணம் செய்துவைக்க ஏற்பாடு மேற்கொண்டனர். செப்., 20ம் தேதி பல்லடத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்றுமுன்தினம் தாராபுரத்தில் ஜோடிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ