உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மணிக்கூண்டு சாலையில் தற்காலிக கடைகள் கனி மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை

மணிக்கூண்டு சாலையில் தற்காலிக கடைகள் கனி மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை

ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, நுாற்றுக்-கணக்கான நிரந்தர ஜவுளி கடைகளுக்கு மத்-தியில், மணிக்கூண்டு சாலையில், 500க்கும் மேற்பட்ட தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கப்-பட்டதால், கனி மார்க்கெட் வியாபாரிகள் உட்பட பலரும் முற்றுகையிட்டனர்.ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, கனி மார்க்கெட் வணிக ஜவுளி வளாகம் அமைந்துள்-ளது. அங்கு, 500க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. பன்னீர்செல்வம் பூங்கா அருகே பேரி-கார்டு போட்டு தடுத்ததால், மணிக்கூண்டு சாலை முழுமையையும் இருபுறம், நடுவிலும் கட்-டில்கள், சாலை ஓரம், சாலையின் நடுவே தார் பாய் போட்டு ரெடிமேட் ஆடைகளை வைத்து நின்று கொண்டு ஜவுளி விற்பனை நடக்கிறது. இதில், 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதால், கிராமங்களில் இருந்து வருவோர், இவர்களிடம் ஜவுளிகளை வாங்கி கொண்டு, கனி மார்க்கெட் உட்பட நிரந்தர கடைகளுக்கு செல்லாமல் தவிர்ப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்-தனர்.இந்நிலையில் நேற்று இப்பிரச்னை அதிகமா-னதால், கனி மார்க்கெட் மற்றும் பிற வீதிகளில் உள்ள ஜவுளி வியாபாரிகள், மணிக்கூண்டு சாலையில் உள்ள தற்காலிக கடைகளை முற்று-கையிட்டும், இங்கு கடை போடக்கூடாது என்றும் பிரச்னையில் ஈடுபட்டனர். ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு தற்காலிக கடைகள், நடு ரோட்டில் போடப்பட்ட கடைகளை அகற்றினர்.இதுபற்றி, கனி மார்க்கெட் ஜவுளி கடை வியாபா-ரிகள் சங்க தலைவர் நுார்சேட் கூறியதாவது: மாநகராட்சிக்கு சொந்தமான கனி மார்க்கெட்டில், பல லட்சம் ரூபாய் டிபாசிட் செலுத்தி, பல ஆயிரம் ரூபாய் மாத வாடகை கட்டி கடை நடத்-துகிறோம். சுற்றி உள்ள பகுதியிலும், பல ஆயிரம் ரூபாய் வாடகையில் நுாற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் செயல்படுகின்றன. அக்கடைகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகளை செல்ல விடாமல், சாலையை முழுவதும் ஆக்கிரமித்து தற்காலிக ஜவுளி கடைகளை போட்டால், எங்களது கடைக-ளுக்கு மக்கள் வராத நிலை ஏற்படுகிறது.தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனை முக்கிய-மானது. ஆண்டுக்கு ஒரு முறை நடப்பதை, மாந-கராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு, எங்களது வியாபாரத்துக்கு நெருக்கடி கொடுத்-துள்ளனர். போலீசார் தற்காலிக கடைகளை அகற்றினாலும், சிறிது நேரத்தில் மீண்டும் கடை போடுகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, வரும் ஆண்டு-களில் நிரந்தர கடைகளில் விற்பனை நடக்கும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ