சிலம்பாட்டம் ஆடிய எம்.எல்.ஏ.,
கோபி: கோபி தாலுகா சிறுவலுார், மொடச்சூர், அயலுார், கலிங்கியம் பஞ்சாயத்தில், 1.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து கோபி வைரவிழா முதல்நிலைப்பள்ளியில் நடந்த, இலவச கண் சிகிச்சை முகாமை, துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் சிலம்பம், பரதம், குரலிசை என பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதையறிந்த செங்கோட்டையன் பயிற்சியாளரிடம் விபரம் கேட்டறிந்தார். அங்கிருந்தவர்களின் கோரிக்கையை ஏற்று, சிலம்பாட்டமும் ஆடிக்காட்டி அசத்தினார். இதை மாணவ, மாணவியர், மக்கள் ஆர்வமாக பார்த்தனர்.