உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியில் செவிலியர் மாயம்

சத்தியில் செவிலியர் மாயம்

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சவுமியா, 19. இவர் சத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு ஆண்டுகளாக செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து, வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போன தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி, சவுமியாவின் தாய் கல்பனா, சத்தி போலீசில் புகாரளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி