மயங்கி விழுந்த முதியவர் சாவு
மயங்கி விழுந்தமுதியவர் சாவுபுன்செய் புளியம்பட்டி, அக். 12-கோவை, இந்திரா நகரை சேர்ந்தவர் முத்து, 60; கோவில்களில் யாசகம் பெற்று வசித்தார். கோவை-சத்தி சாலையில் நேற்று மதியம் நடந்து சென்றார். புன்செய்புளியம்பட்டி அடுத்த விண்ணப்பள்ளி தனியார் பள்ளி அருகே சென்றபோது மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் பார்த்து ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர் சோதனையில் முத்து ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. சத்தி அரசு மருத்துவமனைக்கு, சடலத்தை போலீசார் அனுப்பி வைத்தனர்.