உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடன் கட்ட முடியாத வேதனை; பைனான்சியர் விபரீத முடிவு

கடன் கட்ட முடியாத வேதனை; பைனான்சியர் விபரீத முடிவு

ஈரோடு: ஈரோடு, பெரியசெட்டிபாளையம், ஸ்ரீ சக்தி கார்டனை சேர்ந்தவர் செல்லதுரை, 35; பைனான்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவர் மனைவி சங்கீதா. தம்பதிக்கு நான்கு வயதில் மகள் உள்ளார். தொழிலுக்காக பலரிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் செல்லதுரை இருந்தார். கோவை, பெரியநாய்க்கன்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, குழந்தையுடன் சங்கீதா சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த செல்லதுரை, வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் 'வாழ்க்கை தடுமாறும்போது மரணம் தாங்கி பிடிக்கிறது' என வைத்துள்ளார். இதைப்பார்த்த சங்கீதா அதிர்ச்சி அடைந்து கணவனை, மொபைலில் தொடர்பு கொண்டார்.அவர் அழைப்பை ஏற்காததால், அருகில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டு ஹாலில் கயிற்றில் துாக்கிட்ட நிலையில் செல்லதுரை சடலமாக தொங்கி கொண்டிருந்தார். ஈரோடு தாலுகா போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை