ஆண்டிகுளம் பஞ்., மக்கள் 5 மாதமாக குடிநீருக்கு தவிப்பு
பவானி, பவானி அருகே ஆண்டிகுளம் பஞ்., சேர்வராயன்பாளையத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், பவானி யூனியன் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். ஐந்து மாதமாக தண்ணீர் சரியாக வருவதில்லை. பஞ்., அலுவலகத்தில் முறையிட்டால், பைப் லைன் உடைந்துவிட்டது. சரி செய்து தருவதாக கூறினர். ஆனால் இன்று வரை தண்ணீர் வசதி கிடைக்கவில்லை. இதனால் கேன் குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலை தொடர்ந்தால், சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.