உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகார் தொடர்பான விசாரணைக்கு சென்றவர் போலீஸ் ஸ்டேஷன் அருகே மர்மச்சாவு

புகார் தொடர்பான விசாரணைக்கு சென்றவர் போலீஸ் ஸ்டேஷன் அருகே மர்மச்சாவு

ஈரோடு: சித்தோடு அருகேயுள்ள தயிர்பாளையத்தை சேர்ந்தவர் லோக-நாதன், 25; டிப்ளமோ பட்டதாரி. சாய தொழிற்சாலையில் பணி செய்து வந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில், 1.13 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். தவறாக செய்ததால், இழப்பு ஏற்பட்டதை அறிந்தார். இதுபற்றி '1930' என்ற எண்ணில் தனது புகாரை பதிவு செய்தார். இது, ஈரோடு சைபர் கிரைமுக்கு பரிந்துரை செய்-யப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு போலீசார் அழைத்-தனர்.இதற்காக உறவினர் ஒருவருடன் ஈரோடு சைபர் கிரைம் போலீ-சாரை சந்திக்க, நேற்று மாலை, 5:00 மணி அளவில் புறப்-பட்டார். அவருடன் வந்த உறவினர் தனக்கு, வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வேலை உள்ளதாக கூறி, ஸ்டேஷ-னுக்குள் சென்றுள்ளார். இதனால் ஸ்டேஷன் அருகே நின்று கொண்டிருந்த லோகநாதன், சிறிது துாரம் நடந்து சென்றவர், சாலையோரம் மயங்கி விழுந்துள்ளார். தகவலறிந்த வீரப்பன்சத்-திரம் போலீசார் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. அவர் சாவுக்கான காரணம் தெரிய-வில்லை. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ