உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மில்லில் திருடியவர் கைது

மில்லில் திருடியவர் கைது

மில்லில் திருடியவர் கைதுஈரோடு, அக். 23-பாசூர் அருகேயுள்ள வரகுட்டைபுதுாரை சேர்ந்தவர் ஹரிசந்திரன், 36; சைசிங் மில்லில் மேலாளராக பணியற்றுகிறார். ஈரோடு, 16ரோடு தேவராயன் தோட்டம் மாதேஸ்வரன் நிலத்தில், 1,000 சைசிங் மில் பீம்களை அடுக்கி வைத்திருந்தார். இதில், 30 பீம் திருட்டு போனது.இதுகுறித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் வீரப்பன்சத்திரம், பெரிய சேமூர், கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்த நந்தீஸ்வரன், 24, திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 30 பீம்களையும் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை