உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் ஜோர்

திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் ஜோர்

புன்செய்புளியம்பட்டி புன்செய் புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில் நடப்பாண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.இதையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் திம்மராய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் எழுந்தருளினார். இதை தொடர்ந்து பெருமாளுக்கும், தாயார்களுக்கும் ரக்ஸாபந்தனம் நடந்து வஸ்திரங்கள் சாத்தப்பட்டன. பின் மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு, பெருமாள் கையில் வைக்கப்பட்ட திருமாங்கல்யத்தை பூதேவி, ஸ்ரீதேவி தாயார்களுக்கு பட்டாச்சாரியார்கள் அணிவித்தனர். மஹா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவர், திருத்தேரில் எழுந்தருளி கோவில் உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ