உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகம் அனுப்பும் பணி தீவிரம்

மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகம் அனுப்பும் பணி தீவிரம்

ஈரோடு, கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கும் நிலையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கான பாடப்புத்தகம், நோட்டுகள் ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி புத்தக காப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.நடுநிலை, தொடக்க பள்ளிகளுக்கான பாடப்புத்தகம், நோட்டுகள், கருங்கல்பாளையம் காவிரி சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.இவ்விடங்களில் இருந்து அந்தந்த பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப, அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 219 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பணி, 28க்குள் நிறைவடையும் என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ