உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீரன் சின்னமலை நினைவு தினம்

தீரன் சின்னமலை நினைவு தினம்

நாமக்கல்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 220ம் ஆண்டு நினைவு தினம், கொ.ம.தே.க., சார்பில், சேலம் மாவட்டம், சங்ககிரி ஓடாநிலையில் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க., சார்பில், பேரணி, நாமக்கல்- பரமத்தி சாலை கொங்கு திருமண மண்டபத்தில் துவங்கி, கோட்டை சாலை வழியாக வந்து, காந்தி சிலை முன் முடிந்தது. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை படத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான மாதேஸ்வரன், மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். அதையடுத்து, சங்ககிரி ஓடாநிலைக்கு, புறப்பட்டு சென்றனர். கொ.ம.தே.க., மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.* மோகனுார் கிழக்கு ஒன்றிய கொ.ம.தே.க., சார்பில், வளையப்பட்டி - காட்டுப்புத்துார் பிரிவு சாலையில், தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை