மழை மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்
ஈரோடு::ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதி மழை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. காவிரிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நுாற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.இன்று காலை மாவிளக்கு, பொங்கல் வைபவம் நடக்கிறது. நாளை கம்பம் ஊர்வலம் மற்றும் மழை மாரியம்மன் பூ பல்லக்கில் ஊர்வலம் நடக்கிறது. மே 2ல் மறுபூஜை நடக்கிறது. தீர்த்த ஊர்வலத்தில் ஒரு சில பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வந்தனர்.