டூவீலர் திருடிய களவாணி கைது
சத்தியமங்கலம்:கோவில் வளாகத்தில் மொபட் திருடிய பழங் குற்றவாளியை, சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.கோபி அருகே என் ஜி.பாளையம், பூஞ்சோலை நகரை சேர்ந்-தவர் ரங்கநாதன். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆக., 27ல் பண்ணாரி கோவில் அருகில் திருமண மண்டபத்தில் கேட்டரிங் பணிக்கு மனைவி அன்னபூரணியுடன் சென்றார். 29ம் தேதி மாலை வேலை முடிந்து, பண்ணாரி கோவிலுக்கு மொபட்டில் அன்னபூரணி சென்றார். தரிசனம் முடித்து திரும்பி வந்தபோது மொபட்டை காணவில்லை. புகாரின்படி சத்தி போலீசார், களவாணியை தேடி வந்தனர்.இது தொடர்பாக திருப்பூர், வள்ளிபுரத்தை சேர்ந்த ரமேஷ்-குமார், 32, என்பவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப-டுத்தி சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.இவர் மீது சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில், 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ள-தாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர் கோபி அருகே கவுந்-தப்பாடியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.