போக்சோவில் கைதாகியும் திருந்தல சில்மிஷ டிராக்டர் டிரைவர் கைது
அந்தியூர், அந்தியூர் அருகே அந்தியூர் காலனியை சேர்ந்தவர் கார்த்தி, 38; டிராக்டர் டிரைவர். ஆறு மாதங்களுக்கு முன் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரு மாதத்துக்கு முன் ஜாமினில் வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, அதே பகுதியில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஜாதி பெயரை கூறி திட்டியுள்ளார். இதுகுறித்து ஊர்மக்கள் அளித்த தகவலின்படி அந்தியூர் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தனர். இதில் சில்மிஷம் செய்தது உறுதியாகவே, கார்த்தியை கைது செய்தனர். இதேபோல் எட்டு முறை அந்தியூர் காலனியில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். எனவே இவரை ஜாமினில் வர முடியாத சட்டப் பிரிவில் சிறையிலடைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி கார்த்தி மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார், பவானி குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.