உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலை கிடைக்காதோர் உதவித்தொகை பெறலாம்

வேலை கிடைக்காதோர் உதவித்தொகை பெறலாம்

திருப்பூர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து, எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு, தமிழக அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்கிவருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 600 ரூபாய்; பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200; தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய். பிளஸ் 2 மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதியுள்ள பொதுப்பிரிவினருக்கு 400; மாற்றுத்திறனாளிகளுக்கு 750; பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு 600 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற, www.tnvelaivaaippu.gov.inதளத்திலோ, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை